அரசியல்
புதிய ஜனாதிபதி தெரிவு! – வேட்புமனுக்கள் நாளை
இலங்கையில் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடும். இதன்போதே வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
20 ஆம் திகதி வாக்கெடுப்பை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரே தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
You must be logged in to post a comment Login