இலங்கை
ஆரியகுளத்தின் நடுவே தமிழன்னைக்கு சிலை
ஆரியகுளத்தின் நடுவே தமிழன்னைக்கு 25 அடி உயரத்திற்கு குறையாத சிலையொன்றை நிறுவ யாழ் மாநகர சபை திட்டமிட்டுள்ளது.
இன்று(18) இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் ஆரியகுளத்தின் நடுவில் தமிழன்னையின் சிலையை நிறுவுவதற்கு உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழன்னையின் சிலையை வடிவமைப்பதற்கான பொறுப்பு கலை பண்பாட்டு குழுவிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. யாராவது இதற்கு நிதியுதவி செய்ய முன்வந்தால் அந்த சிலையை வடிவமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் என யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login