இலங்கை
நுணாவில் IOC நிலைய ஊழியர் இனந்தெரியாத நபர்களால் தாக்குதல்!


நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் நிலைய ஊழியர்கள் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை முதல் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில், பெற்றோல் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிடையில் காத்து நிற்கின்றனர்.
அண்மைக் காலமாக மட்டுப்படுத்தப்பட்ட தொகைக்கே பெற்றோல் வழங்கப்பட்டு வரும் நிலையில், எரிபொருள் நிரப்ப வரிசையில் நின்ற இளைஞர்கள் சிலர், தமக்கு அதிகமாக பெற்றோல் வழங்குமாறு கடந்த தினங்களில் தெரிவித்துள்ளனர்.
இதற்கு எரிபொருள் நிலைய ஊழியர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் , குறித்த ஊழியர் இன்றையதினம் இளைஞர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்கள் தப்பிச் சென்ற நிலையில், விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.