இலங்கை
மண்ணெண்ணெய் விலையும் அதிகரிக்கிறது!!!


மண்ணெண்ணெய் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் துறையினர் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை அதிகரிக்கப்படும். இதேவேளை, மண்ணெண்ணெய் மீனவர்களுக்கு மானியமாக வழங்கப்படும்.
மீன்பிடி கப்பல்களுக்கு டீசல், எரிவாயு மற்றும் ஐஸ் போன்றவற்றை தொடர்ச்சியாக வழங்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது – என்றார்.