Connect with us

இலங்கை

விரைவில் மாகாணசபைத் தேர்தல்!

Published

on

Provincial Council election 1

மாகாணசபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை அரசுக்கு, இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (29) மாலை கொழும்பில் நடைபெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி ராதாகிருஷ்ணன், நிர்வாக செயலாளர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோர், கூட்டணியின் செயலாளர் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி, அரசியல் நிலைவரம், மலையக மக்களுக்கான உதவித் திட்டங்கள் உட்பட பல விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா, பொருளாதார ரீதியில் வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த முற்போக்கு கூட்டணி பிரதிநிதிகள், இலங்கை மக்களுக்கான இந்திய உதவிகள் தொடர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை அரசுக்கு, தம்மால் முடிந்த அழுத்தத்தை இந்தியா பிரயோகிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

Advertisement

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மனோ கணேசன்,

“வடக்கு , கிழக்கு உட்பட 9 மாகாணசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தலை நடத்துவதற்கான நிதி திறைசேரியிடம் இல்லை. எனவே, இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இதற்கான நிதி பங்களிப்பை தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும்.

இலங்கையின் தற்போதைய அரசுமீது சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கை இல்லை. தேசிய மட்டத்திலான தேர்தலை நடத்தி மக்களின் மனநிலையை அறிய ஜனாதிபதியும் தயாராக இல்லை.

எனவே, 9 மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்மூலம் மக்கள் ஆணையை அறியலாம். ஜனாதிபதி தரப்புக்கு மக்கள் ஆணை வழங்கினால் அவர் பதவி தொடரலாம். இல்லையேல் வெளியேற வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Advertisement
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

Jey IT Solutions - A London Based Web Agency

Advertisement

ஜோதிடம்

gg gg
ஜோதிடம்1 மாதம் ago

செப்டம்பர் மாத ராசி பலன் 2022! அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர் யார்?

செப்டம்பர் மாதத்தில் மேஷம் ராசியில் துவங்கி மீனம் ராசி வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான இராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம் மேஷம்  மேஷ ராசியினைப் பொறுத்தவரை குரு 12...

hh hh
ஜோதிடம்1 மாதம் ago

உங்களுக்கு பணம் பல மடங்காக பெருக வேண்டுமா? இவற்றை செய்தாலே போதும்

பணவரவை அதிகரிக்க சில எளிய ஆன்மீக வழிகள் உள்ளன. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம். பணத்தை மரப்பெட்டியில் வைப்பதை மட்டும் வழக்கமாக்கி பாருங்கள். நிச்சயம்...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்1 மாதம் ago

இன்றைய ராசிபலன் (01.09.2022)

Medam பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கிய மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர் நண்பர்கள் கிடைப்பார்கள். திடீரென்று அறிமுகம் ஆகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக்...

1753987 tomorrw 1753987 tomorrw
ஜோதிடம்1 மாதம் ago

இன்று விநாயகர் சதுர்த்தி

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!...

deepam deepam
ஜோதிடம்1 மாதம் ago

வீட்டில் பிரச்சனையா? – கற்பூரம் ஏற்றும் போது இதை செய்யுங்க

வீட்டில் வரக்கூடிய பெரிய பெரிய பிரச்சனைகளை கூட சுலபமாக தீர்க்கக் கூடிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நம்பிக்கை இல்லாமல்...

1748967 surya dev worship 1748967 surya dev worship
ஜோதிடம்1 மாதம் ago

இன்று ஆவணி ஞாயிறு – விரதம் இருந்து சூரிய பகவானை வழிபடுங்கள்

இன்று ஆவணி ஞாயிறு. விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது காலம்காலமாக பேணப்பட்டுவரும் ஐதீகமாகும். சூரியனுக்கு சிம்மம் ஆட்சி வீடாகும். ஆவணி மாதம்...

1748584 gokulashtami puja at home 1748584 gokulashtami puja at home
ஜோதிடம்2 மாதங்கள் ago

இன்று கிருஷ்ண ஜெயந்தி – வீட்டில் கிருஷ்ணர் பாதம் வரைந்து வழிபடுங்கள்

உலகளாவிய இந்துக்களால் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இன்று கிருஷ்ணருக்கு பூஜை செய்யும் போது இவற்றை மறக்கக்கூடாது. பூஜைக்குரிய இலை : துளசி பத்ரம் பூஜைக்குரிய மலர்கள்...

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock