இந்தியா
டில்லியிடம் தொடர்ந்து உதவி கோருகிறது கொழும்பு!
இலங்கையின் அவசர எரிபொருள் தேவைகள் குறித்து இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் இந்தியாவின் பெட்ரோலிய விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் புதுடில்லியில் அவசர பேச்சுகளை மேற்கொண்டுள்ளார்.
அத்தியாவசிய சேவைகளிற்கு மாத்திரம் இரண்டு வாரங்களிற்கு எரிபொருள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பெட்ரோலிய பொருள்கள் வழங்கல் மற்றும் விநியோகிப்பது தொடர்பில் இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து இந்தச் சந்திப்பில் இலங்கைதூதுவர் எடுத்துரைத்துள்ளார் என இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மக்கள்எதிர்கொண்டுள்ள பெரும் நெருக்கடிகள் குறித்தும் அவர் விவரித்துள்ளார்.
கடனுதவி மூலம் எரிபொருள்களைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தியா வழங்கிய உதவிக்காக நன்றி தெரிவித்துள்ள
மிலிந்த மொராகொட தற்போது இலங்கைக்கு தேவையாக உள்ள பெட்ரோல் மற்றும் டீசலை அவசர அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து இந்திய அமைச்சருடன் பேச்சுகளை மேற்கொண்டுள்ளார் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை எதிர்கொண்டுள்ள உடனடி நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்குஇந்தியாவும் இலங்கையும் எந்த வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதுகுறித்து இருவரும் ஆராய்ந்துள்ளனர்.
இந்தசந்திப்பின்போது பெட்ரோலிய எண்ணெய், எரிவாயு துறைகளில் இரு நாடுகளும் எவ்வாறு நீண்டகால உறவுகளைப் பேணலாம் என்பது குறித்து இரு தரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.
இந்தியாவின் தற்போதைய வெளி விவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் போல அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் முன்னர் கொழும்பில் இந்தியத் தூதரகத்தில் முதல் நிலை செயலாளர் பதவியில் பணியாற்றியிருந்தார் என்பதும் – இவரே 1987 ஜூலையில் ஹலிக்கொப்டரில் யாழ்ப்பாணம், சுதுமலை அம்மன் கோவிலை அண்டிய வெளியில் போய்இறங்கி, அங்கிருந்து தலைவர் பிரபாகரனை பிரதமர் ராஜிவ் காந்தியுடனான பேச்சுக்கு இந்தியாவுக்கு அழைத்துச் சென்றார் என்பதும் – குறிப்பிடத்தக்கவை.
#SriLankaNews
You must be logged in to post a comment Login