இலங்கை
அம்பாறையில் விழிப்பூட்டல் வேலைத்திட்டம் தீவிரம்!
களுத்துறை மாவட்டம், பண்டாரகம பிரதேசத்தில் அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 09 வயது சிறுமி பாத்திமா ஆயிஷா கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ‘பிள்ளைகளைப் பாதுகாப்போம்’ என்கின்ற விழிப்பூட்டல் வேலைத்திட்டம் சமூக சேவைக்கான நட்புறவு ஒன்றியத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் பிள்ளைகளுக்கு விழிப்பூட்டல் செயலமர்வுகளை ஒன்றியம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
அந்தவகையில் கல்முனையில் தரம் 07, 08 மாணவர்களுக்கு ஒன்றியத்தால் நடத்தப்பட்ட சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சிறப்பு விழிப்பூட்டல் கருத்தரங்கு வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதில் ஒன்றியத்தின் தலைவர் ஏ. றோஸான் முஹம்மத் வளவாளராகக் கலந்துகொண்டு பேசியபோது,
“தற்போது நாடு பூராவும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் கூடுதலாக இடம்பெற்று வருகின்றன. படுகொலைகள்கூட இடம்பெற்றுள்ளன. தற்கொலைகளும் நடக்கின்றன. சிறுவர் சமுதாயம் பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோல் சிறுவர்கள் மிகுந்த சுய விழிப்புடன் செயற்பட வேண்டும்” – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login