அரசியல்
ரஞ்சனுக்கு மன்னிப்பு! – பொன்சேகா கோரிக்கை
சிறையிலுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை சிறைச்சாலையில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடுமையான தண்டனை கிடைத்துள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அரசு மீள் பரிசீலிக்கும் என நம்புகின்றேன். அவர் மேலும் ஒன்பது மாதங்கள் சிறைவாசம் அனுபவிக்க உள்ளதால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கின்றேன்.
ரஞ்சன் ராமநாயக்க தனது இலட்சியங்கள் மற்றும் இலக்குகளைக் கைவிடவில்லை. தற்போது தனது கல்வி இலக்கை கடுமையாகப் பின்பற்றி வருகின்றார்.
சிறையிலிருந்து வெளிவந்தவுடன் ரஞ்சன் ராமநாயக்க தண்டனைக்கு முன்னர் எம்.பி.யாக இருந்ததைப் போன்று தொடர்ந்தும் மக்களுக்கு சேவையாற்றுவார்.” – என்றும் பொன்சேகா குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login