அரசியல்
அமரகீர்த்தி எம்.பி. கொலை: இதுவரை 31 பேர் மாட்டினர்!


ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று நிட்டம்புவ பகுதியில் வைத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
24 வயதான குறித்த சந்தேகநபர், பஸ்யால – போலகந்தகம பகுதியைச் சேர்ந்தவராவார்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி, நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரையில் 31 சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login