அரசியல்
வீடுகளை நிர்மாணிப்பதில் பாரபட்சம்! – சாணக்கியன் குற்றச்சாட்டு


வடக்கு, கிழக்கில், நல்லாட்சி அரசில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணித்துத் தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றில் இன்று இது தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர், “நல்லாட்சி அரசில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை, தாம் பூர்த்தி செய்யமுடியாது என்று அரசின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
எனினும், இதற்குப் பதிலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, “நல்லாட்சி அரசின் காலத்தைக் காட்டிலும் தற்போதைய அரசு கடன் அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட சாணக்கியன் எம்.பி., “இந்த வீடுகளுக்கு ஒரு இலட்சம் ரூபா மாத்திரமே கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு வீடுகளை அமைக்கமுடியுமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த வீடமைப்புத்துறையின் முன்னாள் பிரதி அமைச்சர், “குறித்த வீடுகளுக்கு 6 இலட்சம் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.
எனினும், வழங்கப்பட்ட தகவல்கள் யாவும் பொய்யானவை என்று சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login