இலங்கை
இந்திய அரசின் 2ஆம் கட்ட உணவுப்பொருட்கள் யாழை வந்தடைந்தது!


இந்திய அரசின் இலங்கை மக்களுக்கான இரண்டாம் கட்ட உணவுப்பொருட்களை கொண்ட புகையிரதம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
இன்று காலை யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் கிடைக்கப்பெற்ற இவ்உதவிப் பொருட்களானது 11 பிரதேசசெயலக பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு பகிந்தளிப்பதற்காக குறித்த பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் முதல்கட்டமாக மே 30ம் திகதி
யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டது.
You must be logged in to post a comment Login