இலங்கை
கண்டியில் 14 வயது சிறுமியைக் காணவில்லை!


கண்டி – கலஹா தெல்தோட்டை பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி (வயது 14) எனும் பெண் பிள்ளையை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிறுமியின் வீட்டார் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
எவ்வாறாயினும், சிறுமி தொடர்பில் இதுவரையில் எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தகவல் அறிந்தால் 0775251791, 0787910688 இந்த இலக்கத்துக்குத் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login