இலங்கை
மாணிக்கக்கல் அகழ்வு! – இருவர் கைது


லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் 19 ஆம் கட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் , விஷேட அதிரடி படையினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ஹொப்டன் 19 ம் கட்டை கீழ் பிரிவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் இடத்தை விஷேட அதிரடி படையினர் சுற்றி வளைத்தனர்.
இதன்போது மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 41,35 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்ததோடு மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
விஷேட அதிரடி படையினர் கைது செய்யப்பட்ட இருவரையும் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்கள் இருவருக்கு எதிராகவும் வழக்கு தொடர உள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment Login