இலங்கை
யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களால் கவனவீர்ப்பு போராட்டம்!


யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் அக்கல்லூரி பழைய மாணவர்களின் அமைப்பினால் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு முன்பாக, தெல்லிப்பழை வீதியின் இரு மருங்கிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையில் இடம்பெறும் மோசமான யாப்பு மீறல்களைக் கண்டிக்கும் வகையிலும், கல்லூரியின் நிருவாகத்திலே ஆளுநர் சபையின் தலைவர் மேற்கொண்டு வரும் முறையற்ற தலையீடுகளை எதிர்க்கும் வகையிலும், யாழ்ப்பாணக் கல்லூரி நிதிகளின் தர்மகர்த்தா சபைக்கு எதிராக ஆளுநர் சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment Login