அரசியல்
அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்குக! – கட்சி உறுப்பினர்களுக்கு ரணில் பணிப்பு


ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் செயற்பாடுகளை முழுமையாக முன்னெடுக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளருக்கு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நேற்று கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்குபற்றிய நிகழ்வின் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் செயலாளரான பாலித்த ரங்கே பண்டாரவுக்கு இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.
அதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன கட்சியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு தலைமைத்துவம் வழங்கவுள்ளார்.
அந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க:
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக தமது முழுமையான காலத்தை தாம் அதற்காக செலவிட வேண்டியுள்ள நிலையில் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளை ஏனையவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கட்சியின் அனைத்து அரசியல் செயல்பாடுகளையும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login