Connect with us

அரசியல்

கோட்டா – ரணில் அரசுக்கு எதிராக ஜே.வி.பி. பிரசாரம்!

Published

on

IMG 20220602 WA0008

“நாட்டைக் குட்டிச் சுவராக்கிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசும் வேண்டாம்; மக்களால் நிராகரிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்சவின் நிர்வாகமும் வேண்டாம் என மக்கள் சார்பாக கோரிக்கை விடுகின்றேன்” என்று மக்கள் விடுதலை முன்னணி மட்டக்களப்பில் தெருத் தெருவாகப் பிரசாரம் செய்து வருகின்றது.

ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியும், ஜே.வி.பியின் பிரச்சாரகர்களும், அதன் ஏறாவூர் அமைப்பாளர் புஹாரி தலைமையிலான அணியினரும் ஏறாவூர் நகர கடைத் தெருக்களில் மக்களை விழிப்புணர்வூட்டும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

தெருக்களில் கால்நடையாகச் சென்ற இக்குழுவினர் “வனப்புமிக்க தேசம் அழகான வாழ்க்கை மற்றும் அன்பு மிக்க மக்களே” என விளிக்கும் இரு கையேடுகளை மக்களுக்கு விநியோகித்தனர்.

அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி,

“கோட்டா மற்றும் ரணில் தலைமையிலான நிர்வாகத்தால் இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்த்துவிட முடியாது. அதனால் இவர்கள் ஒதுங்கிக்கொண்டு மக்களாட்சியை நிறுவதற்கு இடம்கொடுக்க வேண்டும். மக்களால் விரும்பப்பட்ட தலைவர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே மக்கள் சார்பாக எமது கோரிக்கையாகும்.

இவர்கள் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் வரை இந்த நாட்டுக்கு விமோசனம் இருக்காது. கொள்ளையடிக்கின்ற அரசுக்கு உதவி அளிக்க சர்வதேச நாடுகள் மற்றும் முதலீட்டாளர்கள் முன்வர வாய்ப்பில்லை.

இவர்கள் மக்களால் வெறுக்கப்பட்ட மக்கள் நிராகரித்த தலைவர்கள். இவர்களால் மக்கள் தொடர்ந்தும் வதைப்பட முடியாது.

கோட்டா ஆட்சிக்கு வரும்போது பருப்பு ஒரு கிலோ 65 ரூபா; இப்போது 535 ரூபா. தேங்காய் எண்ணெய் ஒரு போத்தல் 160 ரூபா; இப்போது 800 ரூபா. அன்று சீமெந்து ஒரு பைக்கற் 850 ரூபா; இப்போது 3,200 ரூபா. சமையல் எரிவாயு அன்று 1,400 ரூபா; இப்போது 5,200 ரூபா. பாண் ஒரு இறாத்தல் 50 ரூபா; இப்போது 160 ரூபா.

விலைகளே அதிகரித்திருக்கின்றன. ஆனால், சம்பளம் அன்று கோட்டா இருக்கும்போது கிடைத்த அதே சம்பளமும் அதை விடக் குறைந்த வருமானமுமே மக்களுக்கு கிடைக்கின்றது. எனவே, இந்த நிலைமையை மாற்ற வேண்டும். இதற்காக்க மக்கள் அனைவரும் அணிதிரளுங்கள்” – என்றார்.

#SriLankaNews

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்5 minutes ago

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 22.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 7 வெள்ளிக் கிழமை, சந்திரன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 7, 2024 வியாழக் கிழமை) இன்று...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 11.11.2024 குரோதி வருடம் ஐப்பசி 11, திங்கட் கிழமை, சந்திரன் கும்ப...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 10.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 24 ஞாயிற்று கிழமை, சந்திரன் கும்ப...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 9 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 9 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 9.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 23, சனிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 8 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 8 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 8.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 22 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 7.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 21, வியாழக் கிழமை, சந்திரன் தனுசு...