இலங்கை
எரிபொருள் நிலைய ஊழியரை பணயக் கைதியாக்கி எரிபொருள் பெற முயற்சி! – ஒருவர் கைது
வரிசையில் காத்திருந்து எரிபொருள் கிடைக்காமையினால், அவ் எரிபொருள் நிலைய ஊழியரொருவரைப் பிடித்து பணயக் கைதியாக வைத்து, எரிபொருளைப் பெற முயற்சித்த போதிலும், அம் முயற்சி பயனளிக்கவில்லை.
பதுளை மாநகரின் எரிபொருள் நிலையமொன்றிலேயே, மேற்படி சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
மேற்படிச் சம்பவம் குறித்த முறைப்பாட்டையடுத்து, பதுளைப் பொலிசார் எரிபொருள் நிலைய ‘சி.சி.டி.வி’ கெமரா மூலம் பரிசீலனை செய்து, எரிபொருள் நிலைய ஊழியரை, பணயக் கைதியாக வைத்த ஒரு நபரை, பதுளைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் இருவரைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ் எரிபொருள் நிலையத்தில் அத்தியாவசியத் தேவைகள் கருதி, அரச திணைக்களங்களுக்கு மட்டும் எரிபொருள் வழங்கப்பட்டு வந்தன.
இந் நிலையில் தமக்கும் எரிபொருள் வேண்டுமென்று பொதுமக்கள் குழுவினர் கோரிக்கை விடுத்தும், அக் கோரிக்கை நிறைவேறாதலால், அந் எரிபொருள் நிலைய ஊழியரொருவரைப் பணயக் கைதியாக வைத்து, போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இப் போராட்டத்தினால் பிரதான பாதை வழி மறிக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்களுக்கும் தடை ஏற்பட்டிருந்தது. இது குறித்த முறைப்பாட்டையடுத்து, பொலிசார் விரைந்து, போராட்டத்தினை கலைத்து, சி.சி.டி.வி. கெமரா மூலம் விடயங்களை பரிசீலனை செய்து ஒருவரைக் கைது செய்துள்ளதோடு, மேலும் இருவரைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்திருந்தமையும், பணயக் கைதியாக இருந்த எரிபொருள் நிலைய ஊழியரையும் விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login