Connect with us

அரசியல்

21வது திருத்த வரைவு வெறும் கண்துடைப்பு ஏற்பாடே! – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு

Published

on

Bar association 0911

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அரசமைப்பிற்கான 21 ஆவது திருத்த வரைவு வெறும் கண்துடைப்பு ஏற்பாடுதான் என்ற சாரப்பட விசனம் தெரிவித்திருக்கின்றது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவினால் நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான வரைவில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் கட்டுப் படுத்தக்கூடிய அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் முக்கியமான ஏற்பாடுகள் உள்ளடக்கப்படவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான வரைவு தொடர்பில் கவலையும் அதிருப்தியும் தெரிவித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு

எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:-

நீதி அமைச்சரால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான வரைவை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆராய்ந்துள்ளது.

நாட்டில் அரசியல் மற்றும் பொருளா தார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தின் முன்மொழிவுகளுக்கு கடந்த ஏப்ரல்23 ஆம் திகதி சட்டத்தரணிகள் கவுன்ஸில் ஒப்புதல் அளித்திருந்தது.

20ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளை நீக்கி 19ஆவது திருத்தத்தை மீளக் கொண்டுவருவதன் மூலமும் 19ஆவது திருத்தத்தின் கீழ் இருந்த அரசமைப்புப் பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நிறுவுவதற்கும், அதே வேளை நிதிச் சுதந்திரம், வெளிப் படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வைமேம்படுத்துவதற்கும் அரசமைப்பின் 21ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கு 13 விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்தது.

அரசமைப்புச் சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பாக அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஏற் பாடுகள் 21ஆவது திருத்தம் மூலம் மீளக்கொண்டுவரப்படும் என்று சட்டத்தரணி கள் சங்கம் கருதியது.  ஆனால் இதுதொடர்பாக 19 ஆவது திருத்தத்தில் உள்ள முக்கிய ஏற்பாடுகள் 21ஆவது திருத்தவரைவில் உள்ளடக்கப்படவில்லை.

19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் ஜனாதிபதி தனக்கு எந்தவொரு அமைச்சுக்கான விடயதானங்களையும் செயற் பாடுகளையும் ஒதுக்குவதைத் தடுக்கிறது.ஆனால் 21 ஆவது திருத்தம் அத்தகைய த டு ப் பு  ஏற்பாடுகள் உ ள் ள ட க் கவில்லை. எனவே ஜனாதிபதி தொடர்ந்தும் அமைச்சுக்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், எந்தவொரு விடயதானங்க ளையும் செயற்பாடுகளையும் தனக்கு ஒதுக்கிக் கொள்ளவும், எந்தவொரு அமைச்சரின் விடயதானங்களையும் செயற்பாடுகளையும் எடுத்துக் கொள்ள வும் முடியும்.

21ஆவது திருத்தம் அரச மைப் பின் சரத்து 44(2)ஐத் திருத்தும் விதியை உள்ளடக்கியிருக்க வேண்டும். 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டவுடன் ஜனாதிபதி அமைச்சுக்களைத் தக்க வைத்துக்கொள்ளும் மற்றும் எந்தவொரு விடயங்கள் அல்லது செயற்பாடுகளையும் தனக்கே ஒதுக்கும் அதிகாரத்தை நீக்கி அத்தகைய ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தைக்கலைப்பதுதொடர்பான 19ஆவது திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகள் மீளமைக்கப்பட வேண்டும். மேலும் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்மொழிவுகளில் உள்ள பின்வரும் விடயங்களை 21 ஆவது திருத்தத்தில் சேர்க்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் பரிந்துரைக்கின்றது.

1. நாணயச் சபையின் உறுப்பினர்கள் அரசமைப்புப் பேரவையின் ஒப்புதலுடன்
நியமிக்கப்பட வேண்டும.

2. அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண ஆளுநர்கள், வெளிநாட்டுத்தூதுவர்கள் மற்றும் தூதரகத் தலைவர்கள் போன்றோர் அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து பிரதமரின் ஆலோசனையுடன் நியமிக்கப்பட வேண்டும்.

3. அரசமைப்புச் சபையின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சட்ட ரீதியான ஒரு அமைப்பு மூலம் ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கள் சிபார்சு செய்யப்பட வேண்டும்.

4. நிதி சுதந்திரம், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகி
யவற்றை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகள்.

17ஆவது திருத்தத்தில் காணப்பட்டவாறு அரசமைப்புச் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர்களல்லாத உறுப்பி னர்களின் எண்ணிக்கையை 3 இல்இருந்து 5 ஆக அதிகரிக்கவும், மாறாகஅரசமைப்புச் சபையில் உள்ள நாடாளுமன்றஉறுப்பினர்களின் எண்ணிக்கையை 7 இல் இருந்து 5 ஆக குறைக்கவும், சட்டத்தரணிகள் சங்கம் பரிந்துரைக்கிறது. இது 2015 இல் 19ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டபோது சட்டத்தரணிகள் சங்கம் எடுத்த நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது.

அரசமைப்பின் 21ஆவது திருத்தம்இலங்கையில் ஸ்திரத்தன்மையை அடைவதற்கு அவசியமான ஒரு படியாக இருப்பதால் அதை முன்கூட்டியே நிறைவேற் றுவதை உறுதி செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றது. – என்றுள்ளது.

#SriLankaNews

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 1 Rasi Palan new cmp 1
ஜோதிடம்1 நாள் ago

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp Rasi Palan new cmp
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டு...

Rasi Palan new cmp 17 Rasi Palan new cmp 17
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

Rasi Palan new cmp 16 Rasi Palan new cmp 16
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 29, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 28, 2024, குரோதி வருடம் 15,...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்1 வாரம் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...