இலங்கை
க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்!


நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது.
இன்று ஆரம்பமாகும் இந்த பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
குறித்த பரீட்சை 3,844 பரீட்சை நிலையங்களிலும் 542 இணைப்புமத்திய நிலையங்களிலும் நடைபெறவுள்ளது.
இந்தமுறை பரீட்சைக்கு 407,129 பாடசாலை பரீட்சார்த்திகளும், 110,367 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்களாக 517,496 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
கொவிட்-19 தொற்றுறுதியான பரீட்சார்த்திகள் தோற்றுவதற்கு விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதோடு, இந்த பரீட்சைக்கு 590 விசேட தேவையுடையவர்களும் தோற்றவுள்ளனர்.
15 சிறைக்கைதிகளும் ஓ.எல். பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.