இலங்கை
450 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!


450 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கம்பஹா, சப்புகஸ்கந்த கோனவெல பிரதேசத்தில், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பதுளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கேரள கஞ்சா அடங்கிய 250 பொதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.