அரசியல்
வெசாக் கூடு விவகாரம்! – ஆளுநர் மறுப்பு


ஆரிய குளத்தில் இராணுவத்தினர் வெசாக் கூடு அமைப்பதற்கு அனுமதி கொடுக்காவிட்டால் யாழ். மாநகரசபை கலைக்கவேண்டிவரும் என எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட வடக்கு ஆளுநர் இடம் அருகே உள்ள விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
யாழ். மாநகர சபை விடயம் தொடர்பில் நான் தற்போது பேச விரும்பவில்லை எனினும் நான் மாநகர சபையை கலைப்பதாக யாரிடமும் கூறவில்லை. எனவே அந்த விடயம் தொடர்பில் நான் பேச வேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்தார்.