அரசியல்
தலைகள் மாறிய அரசை சர்வதேசம் ஏற்காது! – லக்ஷ்மன் தெரிவிப்பு


தலைகளை மாற்றி அமைக்கப்படும், புதிய அரசாங்கத்தை சர்வதேசம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்தாலும் அதற்குஒன்றரை வருட காலம் எடுக்கும். ஒழுங்கு பத்திரத்தில் இடம் பெற்றிருந்தபோதும் அதனை உடனடியாக எதுவும் செய்ய முடியாதென்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கடந்த 09 இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில், உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
” நாட்டில் (09) நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள், சர்வதேச ரீதியாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
அதனால் சர்வதேச ரீதியில் எமது நாடு நம்பிக்கை இழந்துள்ளது.
அன்றைய தினம் அலரி மாளிகையிலிருந்தே இந்த வன்முறை வெடித்துள்ளது. அமைதியான ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.” – என்றார்.