அரசியல்
விக்கியின் நிலைப்பாட்டுக்கு சிறிகாந்தா எதிர்ப்பு!


ரணில் அரசின் அமைச்சரவையில் நிபந்தனைகளுடன் இணைந்துகொள்வது குறித்து பரிசீலிக்க முடியும் எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்தை, நிராகரிப்பதாக கூட்டணியின் பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை தாங்கள் முற்று முழுதாக நிராகரிப்பதாக தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.