அரசியல்
ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை படுதோல்வி!


நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதிக்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சி ஆளுங்கட்சியால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் பிரேரணை, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அப்பிரேரணை வழிமொழியப்பட்டது.
எனினும், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்த ஆளுங்கட்சி உடன்படவில்லை. இதனையடுத்து சுமந்திரனின் யோசனைமீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது நிலையியற் கட்டளையை இடைநிறுத்த ஆதரவாக 68 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இ.தொ.கா. உறுப்பினர்கள் இருவர் ஆதரவாக வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.