இலங்கை
இன்று மின்வெட்டு இல்லை!


இலங்கையில் இன்று மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது எனப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வெசாக் தினத்தை முன்னிட்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றும் நாளையும் மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்கும் என மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த தினங்களில் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும், அனுமதிப் பத்திர நிபந்தனைகளை மீறிச் செயற்படும் உரிமம் பெற்ற மதுபானசாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.