அரசியல்
நிதி அமைச்சு ரணில் வசம்!


நிதி அமைச்சும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமே ஒப்படைக்கப்படவுள்ளது.
பிரதம அமைச்சுக்கு மேலதிகமாக, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் அவர் செயற்படுவார்.
அதேவேளை, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படபோவதாக அறிவித்தவர்களில் இருவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். அவர்களுக்கு அமைச்சு பதவியும் வழங்கப்படவுள்ளது.
இதற்கமைய சுசில் பிரேமஜயந்த கல்வி அமைச்சராகவும், அநுர பிரியதர்ஷன யாப்பா விவசாய அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளனர் என தெரியவருகின்றது.