அரசியல்
ஜப்பானிடமிருந்து 4 பில்லியன் டொலர் இலங்கைக்கு!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜப்பானிய தூதுவர் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க ஜப்பான் தயாராக உள்ளது என ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொள்கையளவில் புதிய நிதி உதவியை வழங்கவும் ஜப்பான் ஒப்புக்கொண்டுள்ள அதேவேளை, ஜப்பானிய தனியார் அறக்கட்டளை நிலையம் ஒன்று 500 பில்லியன் யென் (தோராயமாக 4 பில்லியன் டொலர்) முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது.
பெற்றோல், டீசல், உரங்கள், அத்தியாவசிய மருந்துகள், உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அவசர தேவையுடைய பொருட்களை சர்வதேச சந்தைகளில் இருந்து வாங்குவதற்கு இந்த தனியார் அறக்கட்டளை தயாராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login