அரசியல்
பதவி விலகுகிறார் ஜனாதிபதி??


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை விசேட அறிவிப்பொன்றை விடுத்து பதவி விலகுவார் என நம்புகின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட சம்பவங்களுக்கு பொறுப்பேற்று அவர் கௌரவமாக வெளியேறுவதையே எதிரணி விரும்புகின்றது எனவும் தெரிவித்தார்.
” கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும்வரை இடைக்கால அரசு சாத்தியப்படாது. அவ்வாறானதொரு அரசுக்கு நாம் ஆதரவு வழங்கமாட்டோம். குறைந்தபட்சம் பேச்சுக்குகூட தயாரில்லை.” எனவும் நளின் பண்டார குறிப்பிட்டார்.