அரசியல்
அவசரகாலச் சட்டத்துக்கு எதிராகக் கனடா கண்டனம்!
இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீர்மானம் குறித்து கனேடியத் தூதுவர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“கடந்த வாரங்களாக, இலங்கை முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், அமைதியான கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையை அனுபவிக்கும் குடிமக்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இது நாட்டின் ஜனநாயகத்துக்குக் கிடைத்த பெருமையாகும். அப்படியானால், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்வது கடினமானது” எனக் கனேடியத் தூதுவர் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் பாரியளவில் வெடித்துள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகால நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login