அரசியல்
நெருக்கடியை அரசால் மட்டும் தீர்க்க முடியாது! – கூறுகிறார் அலி சப்ரி
” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு அரசால் மட்டும் தனித்து தீர்வை தேட முடியாது. எதிரணிகளின் ஒத்துழைப்பும் அவசியம்.” – என்று நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுகள் சாதகமாக நிறைவடைந்துள்ளன. நாம் எவற்றையும் மறைக்கவில்லை. பேசப்பட்ட விடயங்கள் எம்.பிக்களுக்கு வழங்கப்படும்.
தற்போதைய நெருக்கடி நிலைமையை தீர்க்க எதிரணிகளின் ஒத்துழைப்பும் அவசியம் .
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் சிறப்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சிறந்த ஒருவர் வந்தால், நான் எனது பதவியை விட்டுக்கொடுக்கவும் தயார். அனைவரும் ஒன்றிணைந்து தீர்வை தேட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் லெபனானின் நிலைமையே இங்கு ஏற்படும்.” – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login