அரசியல்
யுத்தக் குற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும்! – சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து

ஐனாதிபதி பொருளாதார பின்னடைவு, யுத்தக் குற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சி காரியாலயத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்ச இருட்டு அகன்று போக வேண்டும். இன, மத, மொழி வேறுபாடின்றி ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.
அந்தவகையில் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுவரும் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை வழங்குகிறோம். போராட்டத்தில் அரசியல் கலப்பு வேண்டாமென போராட்டக்காரர்கள் விரும்புகிறார்கள்.
வடக்கு கிழக்கிலிருந்து பலர் கலந்துகொள்ள வேண்டுமென விரும்புகின்றனர். புத்தாண்டு மலரும் வேளையில் போராட்டம் வெற்றி பெற வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிரான குற்றப் பிரேரணை, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைக்கு எதிரான சட்டத்திருத்தம் நிறைவேறினால் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்படும் – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login