அரசியல்
கோட்டாவுக்கு எதிராக 5ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!

ஒரே நோக்கத்துக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பொதுமக்கள் ஓரணியாக கொழும்பு – காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக அணிதிரண்டுள்ளனர்.
தொடர்ச்சியாக 5 நாட்களாக இந்தப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதி மற்றும் அரசைப் பதவி விலகுமாறு கோரியே இந்தத் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, அரசுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
#SriLankaNews
You must be logged in to post a comment Login