இலங்கை
குடும்பஸ்தர் கூாிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை!


கூரிய ஆயுதத்தால் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரணை, 13 ஆவது ஒழுங்கைப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த குறித்த நபர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
மது அருந்திக் கொண்டிருந்த நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.
ஹிக்கடுவ – வெல்லத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் காலி, ஹல்விடிகல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

