அரசியல்
முக்கிய பொறுப்பில் நாமல் ! – பஸிலுக்கு வெட்டு


முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய பொறுப்பை ஏற்கவுள்ளார் என்று தெரியவருகின்றது.
இதன் முதல் கட்டமாக நாமல் ராஜபக்ச அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார் என்று தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச இதுவரை செய்து வந்த கட்சியின் விரிவாக்கல் பணிகளை நாமல் ராஜபக்ச மேற்கொள்வார் எனக் கூறப்படுகின்றது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பொதுஜன முன்னணியின் அரசியல் செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன. இதன் காரணமாக அந்தக் கட்சியை மறுசீரமைக்கும் அடிப்படை பொறுப்பு நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளது என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.