Connect with us

அரசியல்

அரபு வசந்தமும், மிரிஹானவில் அரங்கேறிய நடுநிசி போராட்டமும்! – பின்னணி என்ன?

Published

on

ஆட்சியாளர்கள் மற்றும் சர்வாதிகளுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளில் வெடித்த தன்னெழுச்சியான போராட்டங்களே அரபு வசந்தம் என விளிக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் சிறு அளவில் ஆரம்பமான போராட்டங்கள், பின்னர் விஸ்வரூபமடைந்தது, இறுதியில் அது ஆட்சியாளர்களையே, ஆட்சி கதிரையில் இருந்து விரட்டும் நிலைக்கு அழைத்துச்சென்றது.

மக்கள் மத்தியில் ஏற்பட்ட இந்த தன் எழுச்சியை, அமெரிக்க உள்ளிட்ட சில மேற்குலக நாடுகள், சில அரபு நாடுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும் பயன்படுத்திக்கொண்டன. இதனால் இந்த ஜனநாயக போராட்டத்துக்கான செல்வாக்கு சரிந்தது – ஆட்சி மாற்றத்துக்கான நகர்வு என விமர்சிக்கப்பட்டது.

2010 இல் துனிசியாவில் ஆரம்பமான அரபு வசந்தம் அந்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னர் எகிப்து, லிபியா, சிரியா என அந்நாடுகளை பல தசாப்தங்கள் ஆண்ட ஜனாதிபதிகள் வீட்டுக்கு அனுப்பட்டனர்.

எதற்காக தற்போது இங்கு அரபு வசந்தம் பற்றி பேசப்படுகின்றது என யோசிக்கின்றீர்களா? வாருங்கள் விடயத்துக்குள் செல்வோம்.

arab spring

அதாவது கொழும்பில் நேற்றிரவு வெடித்த போராட்டத்தின் பின்னணியில் ‘அரபு வசந்தம்’ சூழ்ச்சி இருப்பதாக இலங்கை அரசு சந்தேகம் வெளியிட்டுள்ளது. இப் போராட்டத்தின் பின்னணியில் கடும்போக்கு வாதிகளே செயற்பட்டுள்ளனர் என பொழுது விடிந்த கையோடு ஜனாதிபதி ஊடகப்பிரிவு அவசர அறிக்கையொன்றையும் விடுத்துள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன. சமையல் எரிவாயு, எரிபொருள் என அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை பல நாட்களாக தொடர்கின்றன.

இதனால் பொறுழையிழந்த மக்கள் தன்னெழுச்சியாக போராட ஆரம்பித்துள்ளனர். மறுபுறத்தில் அரசியல் கட்சிகளும் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றன. இதனால் இலங்கை நிலைவரம் கொதி நிலையிலேயே காணப்படுகின்றது.

இதன் உச்ச கட்டமாக நேற்றிரவு ஜனாதிபதியின் வீட்டையே முற்றுகையிடுவதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். இதற்காக ஜனாதிபதியின் பிரத்தியேக இல்லத்துக்கு செல்லும் மிரிஹான, பெங்கிரிவத்தை வீதியை மறித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

1 12

அதிரடியாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பொலிஸார் குவிக்கப்பட்டனர். நிலைமை உக்கிரமடைந்ததால் கலகமடக்கும் பொலிஸாரும், அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டன.

அதுமட்டுமல்ல பதற்ற நிலைமையை தணிப்பதற்கும், போராட்டம் ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் இருப்பதற்கும் கொழும்பில் சில பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. களனி பகுதியில் போராட்டமொன்று இடம்பெற்றதால் அந்த பொலிஸ் பிரிவிலும் இன்று காலை 5 மணிவரை ஊரடங்கு அமுலில் இருந்தது.

மிரிஹானயில் அணிதிரண்ட போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் பல மணிநேரம் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர். இறுதியில் தண்ணீர்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல்களையும் மேற்கொண்டனர். நீண்ட போராட்டத்துக்கு மத்தியில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

பொலிஸார் இன்று வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் இதுவரையில் பெண்ணொருவர் உட்பட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது படலம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

277231208 515662660163064 2989304242561895817 n

பொலிஸ் தரப்பில் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து பொலிஸார் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். ஊடகவியலாளர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

அத்துடன், பொலிஸ் பஸ்ஸொன்றுக்கும், பொலிஸ் ஜீப்புக்கும், இரு சைக்கிள்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல்களில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளனர் என போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இப்போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு செல்லும் வழியில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னணியில் கடும்போக்குவாதிகள் குழுவொன்றே செயற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

” இரும்புக் கட்டைகள், பொல்லுகள் மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல், ஆர்ப்பாட்டக்காரர்களை தூண்டிவிட்டு மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வன்முறையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் திட்டமிட்ட அடிப்படைவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் நாட்டில் அரபு வசந்தத் உருவாக்க வேண்டும் என்ற பரப்புரையை முன்னெடுத்துள்ளனர்.

சமூக ஊடகங்களை அநாமதேயமாகப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டைச் சீர்குலைக்கும் நோக்கில் இந்தக் கலவரம் நடத்தப்பட்டுள்ளது என கைது செய்யப்பட்டவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் ” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

10 2

போராட்டத்தின் பின்புலத்தை உடன் கண்டுபிடிக்ககூடிய வல்லமை படைத்த அரசு, மக்கள் பிரச்சினைக்கும் அதே பாணியில் தீர்வை முன்வைத்தால் மக்கள் வீதியில் இறங்க வேண்டிய நிலை ஏற்படாது. அதேபோல ஜனநாயக வழியில் எதிர்ப்பை வெளியிடுவதற்கான உரிமை மக்களுக்கு இருக்கின்றது. எனினும், எவரின் சூழ்ச்சிப்பொறிக்குள் சிக்காமல் இருப்பது குறித்தும் விழிப்பாகவே இருக்க வேண்டும்.

குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு எவரேனும் மக்களை தூண்டியாக பயன்படுத்த முற்பட்டால் அத்தகையை நடவடிக்கையை நாம் கண்டித்தாக வேண்டும். மறுபுறத்தில் மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு போலி காரணங்கள் கூறப்படுமாயின் அதனையும் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராபக்ச தலைமையிலான ஆட்சியை வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர். எனவே, ஜனநாயக வழியிலான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மக்களுக்கு ஆட்சியாளர்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என எதிரணிகள் சுட்டிக்காட்டுகின்றன. அதற்கான ஒரே வழி தேர்தலாகும்.

#SriLankaNews

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 7, 2024 வியாழக் கிழமை) இன்று...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 11.11.2024 குரோதி வருடம் ஐப்பசி 11, திங்கட் கிழமை, சந்திரன் கும்ப...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 10.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 24 ஞாயிற்று கிழமை, சந்திரன் கும்ப...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 9 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 9 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 9.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 23, சனிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 8 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 8 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 8.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 22 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 7.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 21, வியாழக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 6 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 6 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 6.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 20, புதன் கிழமை, சந்திரன் தனுசு...