அரசியல்
தொலைநோக்கு இல்லாத செயற்பாடுகளாலேயே நாடு அதலபாதாளத்தில்! – சஜித் சுட்டிக்காட்டு
வர்த்தக சபை, கைத்தொழில் சபை, நிர்மாணக் கைத்தொழில், ஏற்றுமதியாளர்கள் சங்கம், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையேயான சந்திப்பொன்று இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,
தொலைநோக்கு இல்லாத மற்றும் வினைத்திறன் இல்லாத செயற்பாடுகளினால் நாடு இவ்வாறானதொரு அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளதாகவும் அதுவே இன்று சகல துறைகளும் வீழ்ச்சியடையக் காரணமாக உள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கான காரணங்கள் குறித்து உரிய கவனத்தைச் செலுத்தி அதற்கான தீர்வுகள் காணப்பட வேண்டும். கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்கான விசேட வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும். அதுவே எமது கொள்கை.
கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அதற்குத் தேவையான ஊக்கத்தை அளித்து, ஏற்றுமதிக்கு முன்னுரிமை வழங்கும் வேலைத் திட்டங்கள் தேவை. குறிப்பாக நாட்டுக்குத் தேவையான டொலர்களை ஈட்டவும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் கைத்தொழில் உதவியாக இருக்கும் – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login