அரசியல்
ஜனாதிபதியின் முகநூல் பக்கத்தில் comment தெரிவிக்க தடை!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், ‘கருத்து ‘ (comment) பகுதியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘லைக்’ மற்றும் ‘செயார்’ ஆகிய இரு தேர்வுகள் மட்டுமே தற்போது உள்ளன. நேற்று இரவு முதல் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முகநூல் பக்கத்தில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட followers உள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தற்போதைய சூழ்நிலையில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகின்றது. ‘கோ ஹோம் கோட்டா’ என்ற பரப்புரையும் ஆரம்பமாகியுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, ஜனாதிபதி பதவியை வகித்த எவரும், இவ்வாறு தடைவிதிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.