அரசியல்
புலம்பெயர் தமிழர்கள் மீதான தடைகள் விரைவில் விலகுமா? – மீள்பரிசீலனை செய்வதாக அரசு அறிவிப்பு
புலம்பெயர் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் மீள்பரிசீலனை செய்யப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்ய வரவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பிலும் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது ராஜபக்ச அரசு ஆட்சிக்கு வந்ததும் தடைகளை விதித்திருந்தது. இந்தநிலையில் புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு நாட்டுக்கு புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு நாட்டுக்குள் வருவது?என்று கொழும்புச் செய்தியாளர் ஒருவர், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
“புலம்பெயர் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அரசு மீள் பரிசீலனை செய்யத் தயாராக இருக்கின்றது. கூட்டமைப்புடனான சந்திப்பின்போதும் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது” என்று பீரிஸ் குறிப்பிட்டார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login