அரசியல்
இலங்கைக்கு உதவுவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயார்! – சுமந்திரன் எம்.பி தயாரிப்பு
“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்படுமானால், இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராகவே உள்ளனர்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் இன்று தெரிவித்தார் .
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ சர்வக்கட்சி மாநாட்டின்போது புலம்பெயர் தமிழர்களின் முதலீடு தொடர்பில் பல தரப்பினரும் கருத்துகளை முன்வைத்தனர். நாமும் அது பற்றி கதைத்தோம்.
இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுமானால் புலம்பெயர் தமிழர்கள் நிச்சயம் உதவுவார்கள் சுட்டிக்காட்டினேன். புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதற்கான பாலமாக இருப்பதற்கு நாம் தயார்.
இலங்கையின் பொருளாதாரத்தைவிடவும் புலம்பெயர் தமிழர்களின் பண பலம் உள்ளது. எனவே, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி அதற்கு அப்பாலான அரசியல் தீர்வொன்று வழங்கப்படுமானால் நிச்சயம் உதவி கிட்டும்.
ஆனால் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வே அவசியம். மாறாக ஆளுநர் வசம் அதிகாரங்கள் இருக்கக்கூடாது. மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் வசமே அதிகாரம் இருக்க வேண்டும்.” – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login