அரசியல்
மின்சாரம், குடிநீர் பாவனையை குறைக்குக! – அரசு ஆலோசனை


நாடாளுமன்றத்தில் மின்சாரம் மற்றும் குடிநீர் பாவனையை 50 வீதத்தால் குறைக்குமாறு நாடாளுமன்ற பிரதானிகளுக்கு அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் மின்சாரத்துக்கும் குடிநீருக்கும் வருடாந்தம் 8 கோடி ரூபா செலவிடப்படுகின்றது.
இந்நிலையில் மேற்படி உத்தரவின் பிரகாரம் நாடாளுமன்றத்தில் மின்சாரம் மற்றும் குடிநீர் பாவனையை கட்டுப்படுத்த ஏற்கனவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என நாடாளுமன்ற பொறியியலாளர் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னாலுள்ள நீர் நிலையிலிருந்து நீர் வழிந்தோடும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த பொறிமுறை மின்சாரப் பாவனையை குறைக்கும் முகமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு அழகு சேர்க்கும் வகையில் நீர் நிலையிலிருந்து நீர் வழிந்தோடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
இதற்காக நான்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் பாவிக்கப்பட்டன இதை நிறுத்துவதால் 75 மெகா வோட் மின்சாரம் சேமிக்கப்படுவதாக பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் நாடாளுமன்றத்தில் சி. எப்.எல் மின்குமிழ்களுக்குப் பதிலாக எல்.ஈ.டி மின்குமிழ்கள் பாவிக்கப்படுவதாகவும் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login