அரசியல்
பஸிலுக்கு ஆதரவாக நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை!


“நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையை கொண்டுவருவதற்கு நாம் தயார்.”
– இவ்வாறு அமைச்சர் எஸ். எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என எதிரணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
” நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச நாட்டுக்காக பாடுபடுபவர். தற்போதைய நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கு அவர் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே அவரின் இலக்கும்.
இந்நிலையில் அவரின் பயணத்தை குழப்புவதற்கு சிலர் முற்படுகின்றனர். எனவே, நம்பிக்கை இல்லாப் பிரேரணை அல்ல, நிதி அமைச்சருக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையே கொண்டுவரப்பட வேண்டும். அதனை கொண்டுவருவதற்கு நாம் தயார்.” என்றும் அமைச்சர் சந்திரசேன குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login