இலங்கை
கொழும்பில் ஏற்பட்ட திடீர் நீர்த்தடை!!


கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் திடீரென நீர்த்தடை ஏற்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இந்த திடீர் நீர் விநியோக தடை நீர் குழாய் உடைந்தமையினால் ஏற்பட்டுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோக தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நீர் விநியோகம் தடை, தெஹிவளை மற்றும் கல்கிசை பகுதிகள், இரத்மலானை, கொழும்பு 05, கொழும்பு 06, பத்தரமுல்ல, பெலவத்த, உடுமுல்லை, ஹிம்புட்டான ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login