செய்திகள்
தேசிய மட்டத்தில் முதலாம் இடம்பிடித்த யாழ். மாணவனுக்கு டலஸ் அழகப்பெரும் பாராட்டு!
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலாம் இடம்பிடித்த யாழ். மாணவனுக்கு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு வாழ்த்துகூறி, பாராட்டினார்.
அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login