செய்திகள்
துப்பாக்கிச்சூட்டில் குடும்பபெண் பலி!!
மத்துகம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு 9 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த இருவர், பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடாத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கி பிரயோகத்திற்கு T 56 ரக துப்பாக்கிகளே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login