செய்திகள்
கீரிமலை சிறாப்பர் மடம் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
யாழ்ப்பாணம் – கீரிமலை சிறாப்பர் மடத்தின் மீள் புனரமைப்பிற்கான இரண்டாம் கட்ட பணிகளுக்கு இன்றையதினம் அடிக்கல் நடப்பட்டுள்ளது.
அண்மையில் சிறாப்பர் மடத்தின் முதலாம் கட்ட புனர் நிர்மாண பணிகளை சிறாப்பர்மட நிதியத்துடன் இணைந்து தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் சிறாப்பரின் நான்காவது வாரிசான பொன்னா விக்னராஜா அவர்களின் நினைவுதினமான இன்று விஷேட பூஜை வழிபாடுகள் சிறாப்பர் மடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது.
தொடர்ந்து யுத்த காலத்தில் அழிக்கப்பட்ட சிறாப்பர் மடத்தின் தெற்கு பகுதி வாசல் மற்றும் அதனுடன் இணைந்த பகுதியை சிறாப்பர் நிதியத்தின் அனுசரணையுடன் தொல்லியல் திணைக்களம் இணைந்து மீள் புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டும் விழா ஆகம முறைப்படி இடம்பெற்றது.
நிகழ்வில் யாழ் மாவட்ட தொல்லியல் திணைக்கள அதிகாரிகளான பா.கபிலன், உஷாந்தி, தொல்லியல் திணைக்கள ஊழியர்கள், நகுலேஸ்வ ஆலய குமார சுவாமி குருக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login