இலங்கை
புற்றுநோயால் பாதிக்கப்படும் சிறுவர்கள் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு!!
நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் 750 ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை முன்னர் 500 ஆக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
லுகேமியா மற்றும் மூளைப் புற்றுநோய் ஆகியவை குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய்கள்.பெரும்பாலான குழந்தை பருவ புற்றுநோய்களை முறையான மருத்துவ ஆலோசனையின் கீழ் குணப்படுத்த முடியும்.
சில பெற்றோர்கள் கட்டுக்கதைகளைப் பின்பற்றி பிள்ளைகளை தவறான இடங்களுக்கு வழிநடத்திச் செல்கின்றனர்.
இதனால் புற்றுந்நோயைக் குணப்படுத்தும் சந்தர்ப்பம் தவிர்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிறந்த முதல் ஆறு மாதங்களில் ஏற்படும் மார்பகப் புற்றுநோயானது புற்றுநோயை பெருமளவில் தடுக்க முடியும் எனவும், முறையான தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயையும் தடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு திண்பண்டங்கள் குழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பது மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
பெரியவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கு புகைபிடித்தல் மற்றும் மதுப்பழக்கம் தான் முக்கிய காரணம்.
உலக புற்றுநோய் தினம் நாளை அனுஷ்டிக்கப்படுவதாகவும், இதனை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட நிகழ்ச்சிகள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login