இலங்கை
மீண்டும் தூர்வாரப்படும் நீர் மின் உற்பத்தி நிலையங்கள்!!
நாட்டில் மின்னுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினையடுத்து பழைய நீர் மின் உற்பத்தி நிலையங்கள் தூர்வாரப்படுகின்றன.
அந்த வகையில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் உள்ள கழிவுகளை அகற்றி அணைக்கட்டை சுத்தப்படுத்தும் நடவடிக்கை கடந்த 2 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட வருவதாக மவுசாகலை நீர்தேக்க நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய மலை நாட்டில் உள்ள பெரும்பாலான குளங்கள் சுத்தப்படுத்தாததாலும் போதிய அளவு மழை வீழ்ச்சி கிடைக்காமலும் நீர் மின் உற்பத்தி வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக 25 சதவீதத்தால் மின் உற்பத்தி குறைந்துள்ளது.
இவ்வாறான நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தீர்வாக தற்போது இடைக்கிடையே மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் இருந்து நீரைக் கொண்டு செல்லும் சுரங்கப்பாதை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
கெனியோன் மின் உற்பத்தி நிலையத்தில் கடந்த 2 ஆம் திகதி முதல் மின் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் தேசியமின் கட்டமைப்பிற்கு 60 மெகா வாட் மின்சாரம் கிடைக்காமல் போயுள்ளது.
அத்துடன் கடந்த மாதங்களில் கனியோன் மின் உற்பத்தி நிலையத்தின் சுரங்கப்பாதையில் கோளாறு ஏற்பட்டால் அங்குள்ள இரண்டு டேபன்டயினர்கள் சேதமடைந்துள்ளதாக நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர் .
இதற்காக தற்போது சுரங்கப்பாதையை கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் மாறாக இது சீர்குலைக்கும் வேலை இல்லை எனவும் நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login