செய்திகள்
அமைச்சரே நீர்க்கட்டண நிலுவை ரூ. 20 இலட்சம் செலுத்தவேண்டுமாம்!!
அமைச்சர் ஒருவரின் நீர்க்கட்டண நிலுவை ரூ20 லட்சத்தை தாண்டியுள்ளதாகவும் ஆனால் இதுவரை எந்தவொரு பணமும் செலுத்தவில்லை எனவும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
செலுத்தாத 30 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து இதுவரை நீர் கட்டணத்தைச் செலுத்தாத நிலுவைத் தொகையை அவர்களின் மாதாந்த சம்பளம் அல்லது ஓய்வூதியத்தில் இருந்து ஒதுக்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 40 பேர் உள்ளனர், அவர்களில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
பட்டியல்களை விரைவாக செலுத்துவதற்கான இறுதி அறிவிப்புகளும் இந்த வாரத்தில் வெளியிடப்பட்டன.
இதன்படி, தொடர்ந்தும் கட்டணம் செலுத்தத் தவறி வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login