இலங்கை
இனியும் நொண்டிச்சாக்குகளை அரசு சொல்ல முடியாது – விஜித ஹேரத்
கொவிட் -19 தொற்று நோயை முன்னிறுத்தி அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்கப் பார்க்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசின் இந்த நொண்டி சாக்குகளை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்தகாலங்களில் யுத்தங்களை முன்னிறுத்தி தமது தோல்விகளை மறைத்திருந்தது. ஆனால் தற்போது கொரோனாவைக் காரணம் காட்டுகிறது என பாராளுமன்றில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
நாடு இன்று பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. எரிவாயு, உரம், அரிசி மற்றும் காய்கறிகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்த பிரச்சினைகளுக்கும் கொவிட் தொற்று நோய்க்கும் எந்த தொடர்பும் இல்லை.
பிராந்தியத்திலுள்ள பிற நாடுகள் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. எடுத்துக்காட்டாக, பங்களாதேஷ் பொருளாதார வளர்ச்சி 3% மற்றும் வெளிநாட்டு இருப்பு 40 பில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவு செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login