இலங்கை
கொரோனாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள் அதிகரிப்பு!
கொவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை மகப்பேறு மற்றும் மகப்பேறு நிபுணர்கள் நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் சனத் லான்ரோல் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கொவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாகவும் அச்சமயத்தில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டாக காணப்பட்டதாகவும் தற்போது, அந்த எண்ணிக்கை வாரத்திற்கு ஐந்து அல்லது ஆறு ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் விளக்கமளிக்கையில்,
தற்போது கர்ப்பிணித்தாய்மார்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறையிலுள்ளது. கொவிட் 19 தடுப்பூசியின் இரண்டாவது டோசை பெற்று 12 வாரங்களுக்குப் பிறகு, கர்ப்பிணித் தாய்மார்கள் பூஸ்டர் டோஸினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றினை மறந்து சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்க தவறியமையால் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக வைத்தியர் சனத் லான்ரோல் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் முதல் மற்றும் இரண்டாவது கொவிட் 19 தடுப்பூசிகளை பெற்ற குழந்தைகளுக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவதை தவிர்க்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் இதில் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லையென தெரிவித்ததுடன்
முதியோர்களுக்கு பூஸ்டர் ஊசிகள் தேவைப்படுவதாகவும், அதன்மூலம் ஓமிக்ரோனோன் பிறழ்வுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் இறப்புகள் குறைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login